அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்; ஆயிரக்கணக்கானோர் ஊர்வலம்

தர்மபுரியில், அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஆயிரக்கணக்கான பா.ம.க.,வினர் ஊர்வலம் சென்றனர்.;

Update: 2023-12-18 10:46 GMT

தர்மபுரியில், அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஆயிரக்கணக்கான பா.ம.க.,வினர் ஊர்வலம் சென்றனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பாலக்கோடு, டிச.18: தர்மபுரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி தமிழக அரசை கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாமக ஒன்றிய, நகர, கிராம பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மாவட்ட செயற்குழு உறுப்பிணர் வி.எம்.சேகர் தலைமையில் பாலக்கோடு பட்டு பூச்சி அலுவலகம் முன்பிருந்து காவல் நிலையம், ஸ்தூபி மைதானம், கடைத்தெரு, பேருந்து நிலையம், தக்காளிமண்டி வழியாக இரு சக்கர வாகனத்தில் கட்சி கொடி ஏந்தி அணிவகுத்து ஊர்வலமாக ஆர்ப்பாட்டத்திற்க்கு சென்றனர்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சுகர்மில் துரை, துரைஜோதி, குமார், சரவணன், முருகன், நகர செயலாளர் ராஜசேகர், நகர தலைவர்கள் ராஜா, கண்ணன், மாவட்ட துனைத் தலைவர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பிணர் ராஜவேல், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் மாதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக இளைஞர் அணி, மகளிர் அணி, உழவர் பேரியியக்கம் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News