ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!

கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-28 06:59 GMT
ஆர்ப்பாட்டம் 
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில்,தமிழக அரசின் 2024-2025 கனவு இல்லம் திட்டம், ஊரக வீடுகள் பழுதுபார்த்தல் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த போதிய ஊழியர்கள், கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நடைமுறைப்படுத்த தமிழக அரசு நிர்ப்பந்தம் கொடுப்பதை கண்டித்தும், தமிழக அரசின் கனவு இல்லத் திட்ட பயனாளர்கள் தேர்வு குறித்தான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உடனே வெளியிடக் கோரியும், திட்ட பயனாளர்கள் பட்டியலை இறுதிப்படுத்த உரிய கால அவகாசம் அளித்திடக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News