தொடக்ககல்வி ஆசிரியர் இயக்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்
சங்ககிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்ககல்வி ஆசிரியர் இயக்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
Update: 2024-01-12 08:45 GMT
ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்டம் சங்ககிரியில் தமிழ்நாடு தொடக்ககல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடக்ககல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் சங்ககிரி வட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது . இதில் தமிழகரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 12 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணன், குமார், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.