வழிப்பாட்டு தலங்களை பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
போளூர் அருகே தமுமுக சார்பில் வழிப்பாட்டு தலங்களை பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு - வந்தவாசி சாலையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் பாபர் மசூதி இடிப்புதினம் முன்னிட்டு வழிப்பாட்டு தலங்களை பாதுகாக்க கோரி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் ஆரணி சாலையிலிருந்து வந்தவாசி சாலை மோடிக்கு கண்டன குரலிட்டு ஊர்வலமாக வந்தனர். திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சேத்துப்பட்டு நகர தமுமுக சார்பாகபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் H.ஜமால் தலைமை தாங்கினார். மாவட்ட மமக செயலாளர் நசீர் அகமது, மாவட்ட தமுமுக செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் யூனுஸ் மாவட்ட துணைச் செயலாளர் தமீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் மௌலவி ஹூசைன் மன்பஈ, விசிக முன்னாள் மாவட்ட செயலாளர் பாஸ்கர், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் அண்ணாமலை, விசிக மாவட்ட செயலாளர் அசுர. வடிவேல் சிபிஐஎம் தங்கமணி, எல்லப்பன், புரட்சிகர இளைஞர் முன்னணி வேதாச்சலம், வெற்றிச்செல்வன் தமிழ் புலிகள் கட்சி பழனி,ஆனந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக தமுமுக நகர தலைவர் அக்பர் நன்றி கூறினார்.