கள்ளக்குறிச்சியில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்
Update: 2023-11-26 08:52 GMT
விழிப்புணர்வு ஊர்வலம்
கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் சார்பில் சோமண்டார்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சாரண மாணவர்களின் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சாரணர் இயக்க மாவட்ட செயலாளர் சர்ச்சில் காரல் மார்க்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட ஆணையர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க செயலாளர் பாபு வரவேற்றார். ஆலத்துார் அரசு சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் சிவகாமி, அஜித்குமார் முன்னிலையில் டெங்கு தடுப்பு உறுதிமொழி ஏற்றனர். கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்க தலைவர் இமானுவேல் சசிக்குமார் ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ராமலிங்கம், அம்பேத்கர், சீனிவாசன், ராமச்சந்திரன், ஜெய்பிரகாஷ், செல்வராஜ், உதவி தலைவர் கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சத்யா நன்றி கூறினார்.