டெங்கு தடுப்பு பணி - ஆணையர் ஆய்வு
லால்குடி பரமசிவபுரம் பகுதியில் நடைபெற்ற டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகளை நகராட்சி ஆணையர் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
Update: 2024-02-27 06:00 GMT
ஆணையர் ஆய்வு
திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி பகுதிகளில் நகராட்சிப் பணியாளர்கள் மூலம் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று பரமசிவபுரம் நான்காவது குறுக்கு தெரு பகுதிகளில் நகராட்சி பணியாளர்களால் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் நடைபெற்றது. இந்த தடுப்பு நடவடிக்கை பணிகளை லால்குடி நகராட்சி ஆணையர் வை.குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.