விருதுநகர் : சிறப்பு பல் மருத்துவமுகாம்

சிறப்பு பல் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார

Update: 2023-12-04 00:58 GMT
சிறப்பு பல் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் தொடங்கி வைத்தார்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் 6 முதல் 18 வயதுடையவருக்கான சிறப்பு பல் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் இன்று தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக ரத்த கொதிப்பு சர்க்கரை நோய் குறித்து ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அங்கு இருக்கக்கூடியவர்களிடம் அவர்களுக்கு ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதை கண்காணிப்பதற்கு பணியாளர்கள் மூலமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நிறைய எண்ணிக்கையில் அது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கண்புரை அறுவை சிகிச்சைக்கு நமது மாவட்டத்தில் இருக்கக்கூடிய நான்கு இடங்களில் அரசு மருத்துவமனைகளில் கண்புரை அறுவை சிகிச்சையும் தொடர்ச்சியாக செய்து கொண்டு வருகிறோம்.

அதில் RBSK என்ற திட்டத்தின் மூலம் பள்ளி சிறார்களுக்கான மருத்துவ முகாம் அவர்களின் பள்ளிகளுக்கு சென்று, ஆய்வு செய்து குறைபாடுகள் இருக்கிறதா என்பது கண்டறியப்பட்டு வருகிறது. இதில் நீண்ட காலமாகவே நாம் அது குறித்து யோசிக்காமல் அல்லது இது குறித்து சிகிச்சை மேற்கொள்ளாமல் இருப்பது என்பது தெத்துப்பல் என்று சொல்லக்கூடிய அவர்களுடைய சிறு வயதில் இருக்கக்கூடிய பல் எத்தி கொண்டிருக்க கூடிய பிரச்சினைகள். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நமது மாவட்டத்தில் இருக்கக்கூடிய நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கக்கூடிய பல் மருத்துவர்கள் இணைந்து இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

அதன் மூலமாக மாவட்டத்தில் முதற்கட்டமாக ஏறத்தாழ 500 குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து தெத்துப் பல்லை சரி செய்வதற்கான தொடர்ச்சியான சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது. இந்த தெத்துப்பல் பிரச்சினைகளை சரி செய்வதன் மூலம், மாணவர்களுக்கு உள்ள தாழ்வு மனப்பான்மை நீங்கி ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும். இது தொடர்ச்சியாக ஒரு வருடம் காலம் செய்யக்கூடிய சிகிச்சை ஆகும். எனவே பெற்றோர்கள் மாணவ மாணவியர்கள் இந்த சிகிச்சையின் மூலம் தொடர்ச்சியாக சிகிச்சை மேற்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Tags:    

Similar News