மன விரக்தியில் வாலிபர் தற்கொலை

ஊத்தங்கரை அருகே மன விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-05-26 07:22 GMT

பைல் படம் 

 ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோழி நாயக்கன்பட்டி கிராமப் பகுதி சேர்ந்தவர் அர்ஜுனன் 55 அவரது மகன் ராஜேஷ்26 இவர் மூன்று வருடங்களாக சிறிது மனநலம் பாதித்து சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சேலம் மருத்துவமனை சென்று மாலை சுமார் 6 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்தவர் இரவு 11 மணி அளவில் வீட்டில் தூங்க சென்றவர் மன விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இறந்த நபரின் இறப்பு குறித்து நடவடிக்கையை எடுக்க கோரி அவரது தந்தை அர்ஜுனன் அளித்த புகாரின் பெயரில் காவல் ஆய்வாளர் தமிழ்செல்வி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News