பராமரிப்பு காரணமாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்
Update: 2023-12-21 13:16 GMT
கோவை:பீளமேடு ரயில்நிலையத்தில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மாற்றுப்பாதையில் ரயில் இயக்கபடும் என சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிக்கை விடுத்துள்ளது.வண்டி எண் 07159 ஹைதராபாத்- கோட்டையம் ரயில் கோவை ரயில் நிலையம் வழியாக செல்லும் இந்த வண்டி பராமரிப்பு காரணமாக இருகூர்-போதனூர் வழியாக திருப்பி விடப்படுவதாகவும் கோயம்புத்தூர் ஜங்ஷன் வராமல் அதற்கு பதிலாக போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என அறிக்கை கொடுக்கபட்டுள்ளது. ·