திருச்செங்கோடு ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்

மதுரா செந்தில் துவக்கி வைத்தார்

Update: 2023-10-14 08:50 GMT

வளர்ச்சி திட்டப் பணிகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்செங்கோடு ஒன்றியம், கருமாபுரம் ஊராட்சி, ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ.9,99,000 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்துதல் பணிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் பூமி பூஜை செய்த நிகழ்வில் கலந்து கொண்டு பணிகளை தொடக்கி வைத்தார்.

இதே போல் திருச்செங்கோடு ஒன்றியம், கருமாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு ரூ.13,00,000 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திருச்செங்கோடு ஒன்றிய கழக செயலாளர் வட்டூர் ஜி.தங்கவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் S.அருள் செல்வி செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் P.கவிதா பிரபு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News