வளர்ச்சித் திட்டப்பணிகள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ரூ.19.93 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
By : King 24x7 Website
Update: 2023-12-13 03:10 GMT
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா ரூ.19.93 கோடி பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஈங்கூர் ஊராட்சி ஈங்கூரில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினையும் , கருக்கன்காட்டு வலசு பகுதியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.27.96 இலட்சம் மதிப்பீட்டில் வீட்டு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளதையும் , வேளாண்மைத்துறையின் சார்பில் 1 ஏக்கர் பரப்பளவில் நேரடி விதைப்பு மானியத்தில் நெல் பவானி இரகம் நேரடி விதைப்பு வயலினையும், சென்னிமலை பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் ரூ.1813 இலட்சம் மதிப்பீட்டில் 53 கி.மீ நீளத்திற்கு பைப் லைன் அமைப்பதையும் என மொத்தம் ரூ.19.93 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.