வழக்கறிஞர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி வகுப்பு
மண்டல வழக்கறிஞர்களுக்கான துணை இயக்குநரகத்தால் நெல்லையில் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சியில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.;
Update: 2024-02-18 06:07 GMT
வழக்கறிஞர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி வகுப்பு
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட அரசு வழக்கறிஞருக்கான ஒரு நாள் திறன் மேம்பாடு பயிற்சி வகுப்பு நெல்லை மாநகர ஆயுதப்படை நிர்வாக கட்டடத்தில் நேற்று மண்டல வழக்கறிஞர்களுக்கான துணை இயக்குநரகத்தால் நடத்தப்பட்டது.இதில் மாநகர காவல் ஆணையர் முனைவர் மூர்த்தி சிறப்புரையாற்றினார். தடய அறிவியல் துறையை சேர்ந்த நிபுணர்களும் கலந்து கொண்டு தங்களுடைய அனுபவங்களை தெரிவித்தனர்.