மதுரை ரயில் நிலையத்தில் வளர்ச்சி பணிகள் - பொது மேலாளர் ஆய்வு

மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ஆய்வு செய்தார்.

Update: 2024-02-14 09:58 GMT

ஆய்வு 

மதுரை ரயில் நிலையத்தில் ரூபாய் 347.47 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கௌசல் கிஷோர்  ஆய்வு செய்தார். மதுரை ரயில் நிலைய கிழக்கு நுழைவாயில் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய முனையை கட்டிடம், பல்லடுக்கு இருசக்கர வாகன நிறுத்துமிடம், உப மின் நிலையம், பெரியார் பேருந்து நிலையத்தையும் ரயில் நிலையத்தையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

மேற்கு நுழைவாயில் பகுதியில் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம், ரயில் பாதைகளுக்கு மேற்புறம் கட்டப்பட இருக்கும் பயணிகள் வசதி மையத்திற்கான அடித்தளம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். பார்சல் போக்குவரத்திற்காக கட்டப்படும் மேம்பாலம், நடை மேம்பால புனரமைப்பு பணிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கூடுதல் பொது மேலாளருடன் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா, கட்டுமானப் பிரிவு முதுநிலைப் பொறியாளர் நந்தகோபால் முதுநிலைக்கோட்ட பொறியாளர் சூரியமூர்த்தி ஆகியோர் இருந்தனர்.

Tags:    

Similar News