தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் - ஆட்சியர் ஆய்வு

தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Update: 2023-12-27 17:25 GMT
ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கணக்கம்பாளையம் ஊராட்சி பகவதி நகர் பகுதியில் பழங்குடியினர் நலவாரியம் திட்டத்தின் கீழ் தலா ரூ.4,37,430/- வீதம் ரூ.87,48,600/- மதிப்பீட்டில் 20 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், கணக்கம்பாளையம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ1.22 இலட்சம் மதிப்பீட்டில் நூலகம் பழுது பார்த்து புதுப்பிக்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கணக்கம்பாளையம் காமராஜர் தெரு பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடினார். மேலும், குழந்தைகளின் வருகை, எடை மற்றும் உயரம் ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டறிந்து, குழந்தைகளுக்கு தயார் செய்யப்பட்ட மதிய உணவினையும் ஆய்வு செய்து, உணவினை உட்கொண்டார். வாணிப்புத்தூர், கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டார்.
Tags:    

Similar News