சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் கனககிரி ஈஸ்வரர் மலைமீது மகா தீபம்

Update: 2023-11-26 17:37 GMT
தீபம் ஏற்றப்பட்டது 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் கனககிரிஸ்வரர் மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது .திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமசிவாய அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் கனககிரி ஈஸ்வரர் சிவாலயத்தில் காலையில் பரணி தீபமும் ,மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் பாலாம்பிகை சமேத தீர்க்கா ஜலகீஸ்வரர்காலையில் பரணி தீபமும் , அதனை தொடர்ந்து மாலை தீர்க்கா ஜலகீஸ்வரர் மலை மீதுமகாதீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆரணி சாலையில் உள்ள அருணகிரிநாதர் சிவாலயத்திலும்,அண்ணா தெருவில் உள்ள காரணீஸ்வரர் சிவாலயத்திலும்,பழம் பேட்டை பாலாம்பிகை சமேதபசுபதி ஈஸ்வரர்,காசி விசாலாட்சி சமேதகாசி விசுவநாதர் சிவாலயத்திலும், சீயமங்கலம் மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ தம்பேஸ்வரர் சிவாலயத்திலும் மகா தீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News