சமயபுரம் கோவில் உண்டியலில் 58 கிலோ நாணயங்கள் காணிக்கை செலுத்திய பக்தர்
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ஒரு ரூபாய், 2 ரூபாய் என 58 கிலோ நாணயங்களை பக்தர் ஒருவர் செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றினார்.;
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ஒரு ரூபாய், 2 ரூபாய் என 58 கிலோ நாணயங்களை பக்தர் ஒருவர் செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றினார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அம்மனை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்ற கரும்புத்தொட்டிலில் குழந்தையை சுமந்து கோவிலை வலம் வந்தும், அலகு குத்தியும், அக்னிசட்டி ஏந்தியும், துலாபாரம் கொடுத்தும், தங்கம், வெள்ளி, வெளி நாட்டு பணம் போன்றவற்றை காணிக்கையாக உண்டியல்களில் செலுத்தி நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலை யில் கும்பகோணத்தை சேர்ந்த சுதாகர் என்ற பக்தர் அவரது வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக குடும்பத்துடன் நேற்று சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். கோவில் உண்டியலில் சுமார் 58 கிலோ எடையிலான 1 ரூபாய், 2 ரூபாய் நாணயங்களை மூட்டைகளாக கட்டி எடுத்து வந்து, உண்டியல்களில் செலுத்தினார். பின்னர் அவர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.