தாயமங்கலத்தில் நேர்த்தி கடன் செலுத்த குவிந்த பக்தர்கள்

பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் நேர்த்திகடன் செலுத்த பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.;

Update: 2024-04-07 12:16 GMT

நேர்த்தி கடன்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள தென் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்து வருகின்றனர். மிகப் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து இக்கோவிலில் பல்வேறு நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.

இவ்விழாவில் விரதம் இருந்த பக்தர்கள் அக்னி சட்டி ஆயிரம் கண் பானை, அங்க பிரதட்சனை, அழகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல் மற்றும் கரும்புத்தொட்டி எடுத்தல் போன்ற நேர்த்தி கடனை செலுத்தி அம்மனை மனம் உருகி வழிபட்டனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முத்துமாரி அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

Tags:    

Similar News