குமாரபாளையம் வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்

குமாரபாளையம் வழியாக பழனி பாதயாத்திரை சென்று வருகிறார்கள்.

Update: 2024-01-19 09:23 GMT

குமாரபாளையம் வழியாக பழனி பாதயாத்திரை சென்று வருகிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வழியாக பழனி பாதயாத்திரை சென்று வருகிறார்கள். பொங்கல் விழாவையொட்டி மாநிலம் முழுதும் பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். அந்தந்த பகுதி மக்கள் அங்குள்ள முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். சுவாமி மலை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, உள்ளிட்ட கோவில்களுக்கு அதிகம் பாதயாத்திரை செல்வார்கள். சேலம், சங்ககிரி, குமாரபாளையம், உள்ளிட்ட பகுதி மக்கள் பழனி பாதயாத்திரை செல்வார்கள். குமாரபாளையம் வழியாக சாரை, சாரையாக பாதயாத்திரை சென்று வருகிறார்கள். காவடி எடுத்தவாறும், வேல் எடுத்தவாறும் பக்தர்கள் பாத யாத்திரை சென்று வருகிறார்கள். இவர்களுக்கு குமாரபாளையம் பகுதியில் முருக பக்தர்கள் சார்பில் தண்ணீர், உணவு, பிஸ்கட், ஆகியவைகள் வழங்கி வருகிறார்கள்.
Tags:    

Similar News