தாடிக்கொம்பு அருகே முழங்காலிட்டு நோ்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அடுத்த மறவப்பட்டி புதூரில் அமைந்துள்ள புனித சலேத் மாதா தேவாலத் திருவிழா முழங்காலிட்டு நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வோடு நிறைவடைந்தது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-24 12:42 GMT
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அடுத்த மறவப்பட்டி புதூரில் அமைந்துள்ள புனித சலேத் மாதா தேவாலத் திருவிழா முழங்காலிட்டு நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வோடு புதன்கிழமை இரவு நிறைவடைந்தது. இந்தத் தேவாலயத் திருவிழா கடந்த 12-ஆம் தேதி நவநாள் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
இதனிடையே, கடந்த திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. சலேத் மாதா உள்ளிட்ட புனிதா்களின் சொரூபங்கள் வைக்கப்பட்ட மின் ரத பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இறுதியில் மாதா சொரூபம் தாங்கிய ரதம், தேவாலயத்தின் முன் புதன்கிழமை இரவு நிறுத்தப்பட்டது. இங்கு, ஏராளமான கிறிஸ்தவா்கள் கைகளில் மெழுகுவா்த்தி ஏந்தியபடி முழங்காலிட்டு ரதத்தை வலம் வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.