பத்தர்கள் முத்தாலான ஆரத்தி எடுத்து வழிபாடு

நத்தம் அருகே சிறுகுடி மந்தை முத்தாலம்மன் கோயில் விழா பத்தர்கள் முத்தாலான ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர்.

Update: 2024-03-28 07:50 GMT

நத்தம் அருகே சிறுகுடி மந்தை முத்தாலம்மன் கோயில் விழா பத்தர்கள் முத்தாலான ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர்.


திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடியில் மந்தை முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. இதையொட்டி கடந்த 26-ஆம் தேதியன்று நல்லகண்டத்தில் செய்யப்பட்ட சாமி சிலை அதிர்வேட்டுகளுடன் கோயில் மந்தையை வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து கிழக்கு தெரு கோயிலை சென்றடையும் அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.

தொடர்ந்து கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் முத்தாலான ஆரத்தி குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்குஆரத்தி எடுத்து வழிபட்டனர். பின்னர் அம்மன் சர்வ அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகளுடன் கோயிலை சென்றடைந்தது.

Tags:    

Similar News