மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தீச்சட்டி ஊர்வலம்
நெல்லிநகர் கோட்டை மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு,ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
தர்மபுரி மாவட்டம் நெல்லிநகர் ரயில் நிலையம் அருகே எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ஓம் சக்தி கோட்டை மாரியம்மன் கோவில் 40 ஆம் ஆண்டு திருவிழா கடந்த 18ஆம் தேதி பந்த கால் நிகழ்ச்சியுடன் துவங்கி விழா நடைபெற்று வந்தன.தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருக்கல்யாணம் திருவிளக்கு பூஜை அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் பெண்கள் விளக்குபூஜை பால்குட ஊர்வலம் தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
விழாவின் இறுதிநாளான இன்று ஓம் சக்தி மாரியம்மனுக்கு பெண்கள் பால் குட ஊர்வலமும் அதனை தொடர்ந்து பக்தர்கள் 100 க்கும் மேற்பட்டோர் தீச்சட்டி ஏந்தி அப்பகுதி வீதிகளில் ஊர்வலமாக வந்தனர் ஊர்வலத்தில் பக்தர்கள் சாமிவேடமணிந்து வந்தது பக்தர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது நெல்லிநகர், பிடமனேரி பகுதி வீதிகள் வழியாக சென்று அம்மன் ஆலயம் சென்றடைந்தது.முன்னதாக கோட்டை மாரியம்மன் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார் பக்தர்கள் அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது