வீரப்பூர் திருவிழாவை முன்னிட்டு மாயனூரில் குவிந்த பக்தர்களால் பரவசம்

வீரப்பூர் திருவிழாவை முன்னிட்டு மாயனூரில் குவிந்த பக்தர்களால் பரவசம் அடைந்தனர்.

Update: 2024-03-14 13:39 GMT

பக்தி பரவசத்தில் பக்தர்கள்

வீரப்பூர் திருவிழாவை முன்னிட்டு மாயனூரில் குவிந்த பக்தர்களால் பரவசம். கரூர் - திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள வீரப்பூரில் பொன்னர் சங்கர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். சிவன் ராத்திரி அன்று துவங்கும்.

இந்த திருவிழாவில் தொடர்ந்து ஒவ்வொரு திருவிழாவாக ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருவது வழக்கம். இதன் அடிப்படையில் இன்று 6-வது திருவிழாவாக ஸ்ரீ பெரியக்காண்டி அம்மன், பொன்னாண்டவர் யானை மற்றும் குதிரை வாகனத்தில் புறப்பாடு வடநாடு தங்காய் கோவிலில் திருவிழாவாக நடைபெறும். இந்த திருவிழாவில் பங்கேற்கும் கோவில் குடிப்பாட்டுக்காரர்கள்,

கரூர் மாவட்டம், மாயனூர் பகுதியில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் அருகே காவிரி ஆற்றில் குளித்துவிட்டு பக்தி பரவசத்துடன் செல்லாண்டியம்மனை வணங்கிவிட்டு பின்னர் தான், கோவிலுக்கு செல்வது வழக்கம். நேற்று முதல் அதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மேள தாளங்கள் முழங்க, பக்தர்கள் அருள் வந்து, ஆடி அனைவரையும் பரவசப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியை நாளையும் தொடரும் என்பதால் மாயனூர் தொடர்ந்து பக்தர்கள் நிறைந்த பகுதியாக மாறி வருகிறது. இதனைத் தொடர்ந்து அனைவரும் புறப்பட்டு பொன்னர் சங்கர் கோவிலுக்கு செல்ல வீரப்பூருக்கு புறப்பட்டு சென்றனர். வீரப்பூரில் நாளை படுகளம் திருவிழா நடைபெற உள்ளது என்பதும், இந்த திருவிழாவில் தமிழக மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் சுமார் 5 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News