வேகுபட்டியில் அம்பாள் திருவீதி உலா தீபந்தம் ஏத்தி பக்தர்கள் வழிபாடு!

வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் நடைபெற்ற அம்பாள் திருவீதி உலாவின்போது பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி வழிபட்டனர்.

Update: 2024-05-02 07:18 GMT

வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் நடைபெற்ற அம்பாள் திருவீதி உலாவின்போது பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி வழிபட்டனர்.


பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் நடைபெற்ற அம்பாள் திருவீதி உலாவின்போது பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி வழிபட்டனர். இக்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 28ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. 29ஆம் தேதி அக்கினிப்பால்குட விழா நடைபெற்றது. அதையடுத் அம்பாள் திருவீதி உலாநடைபெற்றது.

ஏனமாரியம்மன் கோயிலில் தொடங்கிய அம்பாள் வீதியுலா முக்கிய வீதிகளில் வலம் வந்து கோயிலில் நிறைவுற்றது. அம்பாள் வீதியுலாவின்போது சாலையின் இருபுறமும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக நின்று தீப்பந்தம் பிடித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.

தீப்பந்தம் பிடித்து அம்பாளை வழிபடுவதன் மூலம் வாழ்வில் சகல நலன்களும் கிட்டும் என்பது பக்தர்களின் ஐதீகமாகும். அம்பாளை தீப்பந்தம் ஏந்தி வழிபடும் முறை என்பது தமிழகத்தில் உள்ள கோயில்களில் காணப்படும் அரிதான வழிபாடாகும்.

Tags:    

Similar News