நகைக் கடை உரிமையாளரிடம் ரூ. 92,500 பறிமுதல்

தாராபுரம் அருகே அலங்கியதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.92,500 பணத்தை நகை கடை உரிமையாளரிடமிருந்து பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;

Update: 2024-03-24 08:14 GMT

பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் அதிகாரிகள் 

தேர்தல் பறக்கும் படை நிலைய அலுவலர் சசிகலா தலைமையிலான குழுவினர் அலங்கியம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது காரில் இருந்த பல்லடத்தை அடுத்த காரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் செந்தில்குமார் இடம் ரூ 92,500 இருந்தது. அந்த பணத்திற்கு அவரிடம் உரிய ஆவணம் இல்லை. இதை  அடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து தாராபுரம் ஆர்டிஓ செந்தில் அரசனிடம் ஒப்படைத்தனர் உரிய ஆவணத்தை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளுமாறு தாராபுரம் ஆர்டிஓ தெரிவித்தார்.
Tags:    

Similar News