தர்மபுரியில் ஒரே நாளில் 1238 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,238 வழக்குகளுக்கு தீர்வு.

Update: 2024-03-10 13:10 GMT

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையக் குழுவின் வழிகாட்டுதல்படி தேசிய மக்கள் நீதிமன்றம் தர்மபுரி மாவட்டத்தில்  நடைபெற்றது.

தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்டம் முதன்மை நீதிபதி மணிமொழி தலைமை தங்கி தொடங்கி வைத்தார். நீதிபதிகள் வழக்குகள் தொடர்பான விசாரணை நடத்தினார்.

இதேபோல் வட்டார அளவிலான நீதிமன்றங்களான பாலக்கோடு,காரிமங்கலம், அரூர்,பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் செய்து கொள்ளக் கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்குகள் குடும்ப நல வழக்குகள் மற்றும் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இழப்பீடு வழக்குகள் சமரசம் செய்து கொள்ளக்கூடிய வழக்குகள் குற்ற வழக்குகள் வங்கி வார கடன் வழக்குகள் என மொத்தம் 2271 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1738 வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்பட்டது.

மேலும் நேற்று ஒரே நாளில் 8 கோடியே 5 லட்சம் ரூபாய் தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News