மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்தவர் கைது

கடத்தூர் அருகே தாளநத்தத்தில் மதுபானங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2024-04-15 03:53 GMT
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி, கடத்தூர் பேரூராட்சி மற்றும் காவல் எல்லைக்கு உட்பட்ட தாளநத்தம் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக, கடத்தூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், கொளத்தூர் காவல் உதவி ஆய்வாளர் முகிராஜ் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, மது பதுக்கி விற்றதாக அருள் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூபாய் 3,144 மதிப்பிலான 26 மது பாட்டில்களை கைப்பற்றி அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News