தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தர்ணா போரட்டம்

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தர்ணா போர் நடைபெற்றது.

Update: 2024-03-12 09:11 GMT
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், மின்வாரிய ஓய்வூதியர்கள் மற்றும் பணியில் இருப்பவர் உரிமைகளை பாதுகாக்க உத்தரவாதம் அளிக்கும் சரத்துகளை முத்தரப்பு ஒப்பந்தத்தில் இணைக்க வேண்டும்,

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்கம் கூறியும், 01.04. 2003 பிறகு நிரந்தர பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, மாநிலம் தழுவிய தர்ணா போர் நடைபெற்று வந்த நிலையில்,

இதன் ஒரு பகுதியாக, பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பெரம்பலூர் கிளை சார்பில் கோரிக்கை வலியுறுத்தி தர்ணா போர் மார்ச் 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது வட்டக் கிளை தலைவர் சம்பத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் பஷீர் கலந்து கொண்டு தொடக்க உரை நிகழ்த்தினார்.

மேலும் வட்டக்கிளை செயலாளர் ராஜகுமரன், வட்ட கிளை துணைத் தலைவர்கள் கருணாநிதி, முத்துசாமி, வட்டக் கிளை துணைச் செயலாளர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டு விளக்க உரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியில் சி ஐ டி யு மாவட்ட செயலாளர் அகஸ்டின் நிறைவுறை வழங்கினார் இறுதியாக வட்ட கிளை பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News