அரசு பள்ளியில் வைரவிழா நுழைவு வாயில் திறப்பு

திருச்செங்கோடு அருகே அரசு பள்ளியில் கட்டப் பட்ட வைரவிழா நுழைவு வாயில் திறப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் திறந்து வைத்தார்.

Update: 2024-02-06 05:45 GMT

நுழைவு வாயிலை திறந்து வைத்த எம்எல்ஏ

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் விட்டம் பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 22 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்ட விழா மேடை, ரூ 3 லட்சம் மதிப்பீட்டில் சுந்தரம், ரத்தின சபாபதி ஆகியோர் நிதி உதவியுடன் கட்டப் பட்ட வைரவிழா நுழைவு வாயில் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கலந்து கொண்டு விழாமேடை மற்றும் நுழைவு வாயில் ஆகியவற்றை திறந்து வைத்தார். நிகழ்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பாஸ்கரன் தலைமை வகித்தார். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல், கொள்கை பரப்பு செயலாளர் நந்தகுமார், ஊராட்சி தலைவர் கோபால், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஒன்றிய கவுன்சிலர்செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஜெகநாதன், முன்னாள் லாரி உரிமையாளர் சங்க தலைவர் அனிதா வேலு, திமுக பிரமுகர் கணபதி ஊர்பிரமுகர்கள் சுந்தரம், ரத்தினசபாபதி உள்ளிட்ட பிரமுகர்கள் ஆசிரிய ஆசிரியைகள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தமிழ் மொழியின் சிறப்பு குறித்த பாடலுக்கு ஆடிய நடனம், வீர மங்கை வேலு நாச்சியார் குறித்த நாடகம் பார்வையாளர்களை கவர்ந்தது.

Tags:    

Similar News