திருச்சுழியில் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்ற இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் இருவர் பேருந்தின் பின் சக்கரத்தில் மாட்டி உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (28), சுதாகர் (22) இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்சுழி சாலையில் அடுப்புக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது திருச்சுழி பூமிநாதர் கோவில் அருகே அவர்களுக்கு முன்னால் அருப்புக்கோட்டை நோக்கிச் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றுள்ளனர்.
அப்பொழுது எதிரே திருச்சுழியை சேர்ந்த மணிகண்டன் (21) ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியதில் பாஸ்கரன், சுதாகர் இருவரும் பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் மாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த இருவரின் உடல்களும் உடற்கூறு ஆய்விற்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் குறித்து திருச்சுழி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.