சுற்றுலா வழிகாட்டிகள் இணையத்தில் பதிவு செய்ய வலியுறுத்தல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா வழிகாட்டிகள் இணையத்தில் பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
Update: 2023-11-28 13:26 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா வழிகாட்டிகள் இணையத்தில் பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வழி காட்ட ஏராளமான வழிகாட்டிகள் கொடைக்கானலில் உள்ளனர். இதேப்போல பழனியிலும் பலரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கட்டாயமாக இணையத்தில் பதிவு செய்து அதற்கான சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால், வழிகாட்டியாக செயல்பட முடியாது. எனவே, சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா இயக்குபவர்கள், பயண முகவர்கள், சுற்றுலா போக்குவரத்து இயக்குபவர்கள் ஆகியோர் முறையான உரிமம் பெறுவதற்கு இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும் என, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி அறுவுறுத்தியுள்ளார்.