திண்டுக்கல் அரசு மருத்துவர்கள் சாதனை!
பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேசாத 10 குழந்தைகளுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிறப்பு சிகிச்சை அளித்து காது கேட்கும், பேசும் திறனை வர வைத்து சாதனை படைத்துள்ளனர்.
Update: 2024-03-05 06:52 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, நிலக்கோட்டை, தாடிக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 குழந்தைகள் காது கேட்காத, வாய் பேச முடியாத குறைபாடுகளால் பாதிக்கப்பட்டதை கண்டறிந்தனர். இவர்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவில் அனுமதித்து எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் சோதனை செய்து அதிலுள்ள குறைபாடுகளை கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் செவி, பேச்சு திறன் பெற்ற டாக்டர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஓராண்டு காலத்தில் குழந்தைகள் சரளமாக பேச முடிந்ததுடன், காது கேட்கும் திறனையும் பெற்றுள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வீரமணி கூறுகையில், 'பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச முடியாத 10 குழந்தைகளுக்கு தலா ₹7 லட்சம் வீதம் ₹70 லட்சம் செலவில் 'காக்ளியர் இம்பிளான்ட்' என்னும் நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றார்.