திண்டுக்கல் மாநகர் நல அலுவலர் திடீர் ஆய்வு

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் நடைபெறும் உணவு தயார் செய்யும் இடத்தை ஆய்வு மேற்கொண்டனர்

Update: 2024-02-08 11:02 GMT
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் பரிதாவாணி முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு தயார் செய்யும் இடத்தை புதன்கிழமையான இன்று காலை 8 மணியளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சுகாதாரமான முறையில் சமையல் செய்யப்படுகிறதா? என்றும், உணவு சமைக்கும் இடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்குமாறும், பாதுகாப்பான முறையில் உணவு தயார்படுத்தவும் அறிவுறுத்தினார்.மேலும் மாநகராட்சிக்கு சொந்தமான மேற்கு ரத வீதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.
Tags:    

Similar News