திண்டுக்கல் : ஏ.எம்.சி.,சாலையில் மறியல் போராட்டம்
அரசுக் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி திண்டுக்கல்லில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
By : King Editorial 24x7
Update: 2023-10-27 16:25 GMT
பென்ஷன் ரூ. 6750 வழங்க வேண்டும்,அரசு துறை காலிப் பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை சேர்த்து முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் ஏ.எம்.சி.,ரோட்டில் மறியில் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் செல்வராஜ், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் ராஜசேகரன்,முன்னார் மாநில செயலாளர் கருணாநிதி முன்னிலை வகித்தனர். வடக்கு எஸ்.ஐ.,சித்திக் தலைமையிலான போலீசார் 115 பேரை கைது செய்தனர். மாலையில் விடுவித்தனர்.