இயக்குனர் வெற்றிமாறன் நெல்லை வருகை
பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திரையரங்கிற்கு வருகை தந்த பிரபல இயக்குனர் வெற்றிமாறன் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.;
Update: 2024-05-12 08:10 GMT
இயக்குனர் வெற்றிமாறன்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திரையரங்கிற்கு இன்று (மே 12) பிரபல இயக்குனர் வெற்றிமாறன் வருகை தந்தார். அவருக்கு திரையரங்கு உரிமையாளர்கள், அலுவலர்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் ரசிகர்களுடன் பல்வேறு சினிமா அனுபவங்கள் குறித்து கலந்துரையாடல் நடத்தினார். இயக்குனரின் வருகையால் திரையரங்கில் விழாக்கோலம் பூண்டது.