சிவகங்கையில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கல்

சிவகங்கை மாவட்டத்தில் இன்று 171 மாணவர்களுக்கு கல்வி கடனை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார்

Update: 2024-02-15 16:18 GMT

கல்விக்கடன் வழங்கல்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியர் பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்ற சிறப்பு கல்வி கடன் முகாமில் மாணாக்கர்களுக்கு கல்வி கடன் ஆணைகளை, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், வழங்கி தெரிவிக்கையில்,

சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி பயிலும் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் மாவட்ட அளவில் சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, இன்றைய தினம் சிவகங்கையில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமினை முன்னிட்டு நாளாது தேதி வரை விண்ணப்பித்த மாணாக்கர்களுக்கு, அந்தந்த வங்கிகளினால் அனுமதிக்கப்பட்டு அதன்படி இன்றைய தினம் மொத்தம் 171 மாணாக்கர்களுக்கு ரூ.6.83 கோடி மதிப்பீட்டிலான கல்வி கடன் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய தினம் நடைபெற்ற இம்முகாமில் கலந்து கொண்ட 21 மாணாக்கர்கள் புதிய கல்வி கடனுதவிகள் பெறுவதற்கும், விண்ணப்பங்களை வங்கி அலுவலர்களிடம் சமர்ப்பித்துள்ளனர். தகுதியான மாணாக்கர்களுக்கு கடன் அனுமதி உத்தரவுகளை இரண்டு வாரங்களில் கிடைக்க செய்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், கல்வி கடன் பெற்றுள்ள மாணாக்கர்கள், இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்டு, வங்கிக்கடன்களை சரிவர செலுத்தி, சிறப்பாக பயின்று தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

Tags:    

Similar News