நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆறு கோடி மதிப்பிலான கடன் வழங்கல்
நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கடன்கள் வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-23 11:29 GMT
கடன்கள் வழங்கல்
நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் ஆகியவற்றின் சார்பில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் கடன் வசதி எளிமையாக்கள் இயக்கம் நடந்தது நிகழ்ச்சிக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சையது வரவேற்றார்.
நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை வகித்தார் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் முன்னிலை வைத்தார் நிகழ்ச்சியில் 103 பயனாளிகளுக்கு ரூபாய் ஆறு கோடி மதிப்பில் கடன்களை நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானிடம் வர்க்கீஸ் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரிசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்