மானியக் கடன் வழங்கல்
சிவகங்கை பிற்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
சிவகங்கை பிற்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 பயனாளிகளுக்கு ரூ.15.70 லட்சம் கடனுதவியை கழக தலைவர் காஜாமைதீன் வழங்கினார். சிவகங்கையில் நடந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை வகித்தார்.
அமைச்சர் பெரியகருப்பன், பிற்பட்ட பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் காஜாமைதீன், மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், கலெக்டர் பி.ஏ.,(பொது) ஜெயமணி, கூட்டுறவு இணை பதிவாளர் கே.ஜினு, முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், நகராட்சி தலைவர் துரை ஆனந்த், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர் பங்கேற்றனர்.
பிற்பட்ட பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் காஜாமைதீன் பேசியதாவது, இம்மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட குறியீடு ரூ.1 கோடி வரை கடனுதவி செய்யலாம். ஆனால், ரூ.19.81 லட்சம் கடனுதவி மட்டுமே வழங்கியுள்ளனர். தற்போது ரூ.60.55 லட்சம் வழங்கி, குறியீட்டை 61 சதவீதம் வரை எட்டிவிட்டனர். மானியத்துடன் குறைந்த வட்டியில் வழங்கப்படும் கடனுதவி குறித்து விழிப்புணர்வு வழங்க வேண்டும், என்றார்.