பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு: மதுரை மாநகராட்சி அதிரடி
மதுரை மாநகராட்சி வரி செலுத்தாத வணிக நிறுவனத்தின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், தனியார் பள்ளிகள். அரசு அலுவலகங்கள், பெரிய நிறுவனங்கள், மால்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சொத்து வரி, பாதாள சாக்கடை கட்டணம் குடிநீர் கட்டணம் மற்றும் கடை வாடகை வசூல் செய்யும் பணிகள் மாநகராட்சி வருவாய் பிரிவின் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக வசூல் செய்யும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.3 (மத்தியம்) வார்டு எண்.62 பைபாஸ் சாலையில் உள்ள ஸ்மார்ட் பஜார் வணிக நிறுவனம் இயங்கும் கட்டிடத்திற்கான சொத்து வரி ரூ.137,08,372 நிலுவையாகவும் மற்றும் ஜெயசக்தி ஹோட்டல் கட்டிடத்திற்கான சொத்துவரி ரூ.73,82,824 நிலுவையில் உள்ளது. மேற்கண்ட வணிக நிறுவனத்திற்கு நிலுவை தொகையை செலுத்த கோரி ஜப்தி நோட்டீஸ் சார்பு செய்தும், பலமுறை நேரில் சென்று வரி செலுத்தும் படி மாநகராட்சியால் கோரப்பட்டும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை வணிக நிறுவனத்தார் இது நாள் வரை முழுமையாக செலுத்தப்படவில்லை.
எனவே மேற்கண்ட வணிக நிறுவனத்தின் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.சரவணன் அவர்கள் முன்னிலையில் மாநகராட்சி பணியாளர்களால் இன்று (05.012024) துண்டிப்பு