தேன்கூட்டை கலைக்க கூறிய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்.
தேன்கூட்டை கலைக்க கூறிய ஆலாந்துறை தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை:ஆலாந்துறை பகுதியில் அரசு ஆரம்ப துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.பள்ளி கட்டிடத்தில் தேன்கூடு அமைந்திருந்த நிலையில் அப்பள்ளியில் பயின்று வரும் ஏழாம் வகுப்பு மாணவன் சந்துருவிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி தீப்பந்தத்தை மாணவனிடம் கொடுத்து தேன் கூட்டை கலைக்குமாறு கூறியுள்ளார்.
கையில் தீப்பந்தத்துடன் சென்ற சிறுவன் தேன்கூட்டை கலைக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக உடையில் தீ்ப்பற்றியது. இதில் மாணவன் சந்துருவின் உடலில் தீக்காயம் ஏற்பட்டு படுகாயமடைந்துள்ள நிலையில் பள்ளி ஆசிரியர்கள் சிறுவனை மீட்டு அருகே இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தனர்.
இதனை தொடர்ந்து சிறுவன் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.இதுகுறித்து ஆலந்துறை போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை தலைமையாசிரியர் பழனிச்சாமியை பணியிட நீக்கம் செய்துள்ளது. காயமடைந்த மாணவன் சந்துருவின் மருத்துவ செலவை முழுவதும் தான் ஏற்று கொள்வதாக பழனிச்சாமி தெரிவித்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யபடவில்லை.