சிவகாசி அருகே மதுபோதையில் தகராறு: வடமாநில தொழிலாளி கொலை

சிவகாசி அருகே மதுபோதையில் தகராறு வடமாநில தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.;

Update: 2024-07-01 16:14 GMT
சிவகாசி அருகே மதுபோதையில் தகராறு வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் நான்கு பேரிடம் தீவிர விசாரனை

சிவகாசி அருகே மதுபோதையில் தகராறு வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் நான்கு பேரிடம் தீவிர விசாரனை... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் இவருக்கு சொந்தமான சிமெண்டு செங்கல் தயாரிக்கும் செங்கல் சூளை நாரணாபுரம்புதூர் பகுதியில் இயங்கி வருகிறது.

இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.மேலும் ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் அங்கு பணிபுரியும் சிலர் நண்பர்களுடன் சேர்ந்து நேற்று இரவு அதே பகுதியில் உள்ள பொட்டலில் உட்கார்ந்து மது அருந்தி உள்ளனர்.அப்போது ஒருவருக்கொருவர் தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதில் பீகார் மாநிலம் கயா பகுதியைச் சேர்ந்த காங்ரேஷ்புய்யான் (43) என்ற தொழிலாளியை உடன் மது அருந்திய உள்ளுர் பகுதியை சேர்ந்த தமிழ் நாட்டு நண்பர்களும் ,வட மாநில நண்பர்களும் வாக்குவாதம் ஏற்பட்டன.

அப்போது நாராணபுரத்தை சேர்ந்த வனபாண்டியிடம் தகராறு ஏற்பட்டத்தில் வனபாண்டி தான் கத்தியால் குத்திக்கொலை செய்ததாக விசாரணையில் தெரியவருவதாக முதல் கட்ட விசாரணையில் காவல் தரப்பு தெறிவிக்கிறது.தப்பி ஓடிய கொலையாளியை தனிப்படை அமைத்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News