பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கல்
கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் பகுதியில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.;
Update: 2024-05-30 16:59 GMT
அன்னதானம் வழங்கல்
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே இன்று மதியம் கடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் பொதுமக்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு சைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் சன்மார்க்க சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.