கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு இலவச உபகரணங்கள் வினியோகம்.
பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு இலவச உபகரணங்கள் வினியோகம்.;
By : King 24x7 Website
Update: 2024-03-19 06:38 GMT
பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு இலவச உபகரணங்கள் வினியோகம்.
பரமத்தி வேலூர் வட்டம் கபிலர்மலை வேளாண்மை துறையினர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கபிலர்மலை வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு பண்ணை உபகரணங்களான கடப்பாரை, மண்வெட்டி, களைக்கொத்து, காரைச்சட்டி மற்றும் கருக்கு அருவாள் அடங்கிய பண்ணை உபகரணங்களின் தொகுப்பு வினியோகம் செய்யப்படவுள்ளன சிறு குறு விவசாயி சான்று அல்லது உழவர் பாதுகாப்பு அட்டை வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் கணினி சிட்டா நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியற்றை வேண்னாம அலுவலகத்தில் அளித்து உபகரணங்களை பெற்றுச் செல்லுமாறு அறிவுறித்தியுள்ளனர். இதில் பெருங்குறிச்சி திடுமல், திடுமல் கவுண்டம்பாளையம் மற்றும் கோப்பணம்பாளையம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு கபிலர்மலை வட்டார உதவி வேளாண்மை அலுவவர்கள் கோரும் சந்திரசேகரன் சமேஷ் ஸ்ரீதர் மற்றும் ராஜா ஆகியோரை விவசாயிகள் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என வேளாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர்.