மருத்துவமனை வளாகத்தில் 3 இடங்களில் ஓ.ஆர்.எஸ்.கரைசல் வழங்கல்

திண்டுக்கல் அரசு மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனை வளாகத்தில் 3 இடங்களில் ஓ.ஆர்.எஸ்.கரைசல் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Update: 2024-05-04 08:59 GMT

அரசு மருத்துவமனை

திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து வெயிலால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவு அருகில் 10 படுக்கைகளுடன் தனி வார்டு, குழந்தைகளுக்கு குழந்தைகள் வார்டில் 5 படுக்கை, மருத்துவமனை வளாகத்தில் 3 இடங்களில் ஓ.ஆர்.எஸ்.கரைசல் கிடைக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News