வணிகர் தினத்தில் கடைகளை மூட துண்டு பிரசுரம் வழங்கல்

வணிகர் தினத்தன்று நீலகிரியில் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கத்தினர் துண்டுபிரசுரம் வழங்கினர்.

Update: 2024-05-04 02:19 GMT

வணிகர் தினத்தில் கடைகளை மூட துண்டு பிரசுரம் வழங்கல்

மே 5ம் தேதியை வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு வணிகர் சங்கங்களும் தங்களது சங்க நிர்வாகிகளை திரட்டி மாநாடு நடத்துகின்றனர். வியாபாரிகளுக்கு ஏற்படும் இன்னல்கள், அதை களைவதற்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கிறார்கள். அது மட்டுமின்றி வியாபாரிகளுக்கு அரசின் சார்பில் என்ன உதவி வேண்டும் என்பது பற்றியும் கேட்டறிகின்றனர். இதற்காக வியாாரிகள் கடைகளுக்கு விடுமுறை வட்டு மாநாட்டுக்கு செல்கின்றனர்.

இந்த ஆண்டு 41வது வணிகர் தின மாநாடு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மதுரையில் நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வியாபாரிகள் சங்கத்தினர் ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், கோத்தகிரி உள்பட பல்வேறு பகுதியில் உள்ள கடைகளை நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகளை மூட வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.

ஊட்டி மார்க்கெட் பகுதியில் தலைவர் ராஜா முகமது, செயலாளர் குலசேகரன், பொருளாளர் சரவணன் தலைமையில் கடைகளுக்கு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது. இது குறித்து வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகையில், "எங்களது கோரிக்கைகள் குறித்து விவாதிக்க மதுரையில் ஒன்று கூட உள்ளோம்.

இதனால் வரும் 5ம் தேதி ஒரு நாள் நீலகிரி மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சிரமத்தை தவிர்க்க தங்களுக்கு தேவையான பொருட்களை  பொதுமக்கள் முன் தினமும் வாங்கி வைத்துக் கொள்ளலாம். இதற்காக சனிக்கிழமை இரவு 10 மணி வரை கடைகள் செயல்படும், என்றனர்.

Tags:    

Similar News