ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு பட்டா வழங்கல்

செங்கோட்டை ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது.;

Update: 2024-06-15 12:47 GMT

செங்கோட்டை ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது.


தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு பட்டா வழங்கல் செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வைத்து செங்கோட்டை வட்டத்தில் 1433-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) தென்காசி மாவட்ட வருவாய் அலுவலரால் 11. 06. 2024 அன்று இலத்துார் குறுவட்டத்திற்கும், 12. 06. 2024 அன்று பண்பொழி குறுவட்டத்திற்கும் 13. 06. 2024 அன்று செங்கோட்டை குறுவட்டத்திற்கும் நடைபெற்றது. செங்கோட்டை வட்டத்தில் வருவாய் தீர்வாய அலுவலரான தென்காசி மாவட்ட வருவாய் அலுவலா் கு. பத்மாவதி தலைமையில் இலத்துார் குறுவட்டத்திற்கு நடந்தது. அதில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது.

Advertisement

இதில் பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், குடும்ப அட்டை கேட்டல், முதியோர் உதவித்தொகை ஆகிய கோரிக்கைள் குறித்த மனுக்கள் பெறப்பட்டது. இறுதி ஜுன் 13 ஆம் தேதி தகுவாய்ந்த பயனாளிகள் 10நபர்களுக்கு நத்தம் பட்டாவை மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி வழங்கினார்.

நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவா் அலுவலக பேரிடர் மேலாண்மைப் பிரிவு வட்டாட்சியா் வெங்கடேசன், தலைமை உதவியாளா் வீரலெட்சுமி, செங்கோட்டை வருவாய் வட்டாட்சியா் மணிகண்டன், மண்டல துணை வட்டாட்சியா் ராஜாமணி, தலைமையிடத்துத் துணை வட்டாட்சியா் ரத்தினபிரபா, தேர்தல் துணை வட்டாட்சியா் சிவன்பெருமாள், வருவாய் ஆய்வாளா்கள் இலத்துார் சரவணகார்த்தி கேயன், பண்பொழி கமலா, செங்கோட்டை மாடசாமி மற்றும் கிராம நிர்வாக அலுவலா்கள் முருகேசன், குமார் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News