சேலத்தில் கைப்பந்து வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
கன்னந்தேரி கிராமத்தில் உள்ள பச்சியம்மன் நண்பர்கள் குழு கைப்பந்து வீரர்களுக்கு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று சேலத்தில் நடைபெற்றது.;
Update: 2024-04-04 07:57 GMT
கன்னந்தேரி கிராமத்தில் உள்ள பச்சியம்மன் நண்பர்கள் குழு கைப்பந்து வீரர்களுக்கு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று சேலத்தில் நடைபெற்றது.
சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் சங்ககிரி தாலுகா கன்னந்தேரி கிராமத்தில் உள்ள பச்சியம்மன் நண்பர்கள் குழு கைப்பந்து வீரர்களுக்கு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று சேலத்தில் நடைபெற்றது. மாவட்ட கைப்பந்து கழக ஆலோசகர் விஜயராஜ் தலைமை தாங்கி விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணைத்தலைவர் ராஜாராம், இணை செயலாளர்கள் வடிவேல், வேங்கையன், துணை செயலாளர் ஹரிகிருஷ்ணன், நிர்வாகி நந்தன் உள்ளிட்ட கைப்பந்து வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.