சூழல் பூங்காவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Update: 2023-12-15 05:58 GMT
புதுக்கோட்டை நகராட்சி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி எதிர்புறம் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பூங்காவின் கட்டுமானப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி, புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஷியாமளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.