குழந்தைகள் மையத்தை மாவட்ட ஆட்சியர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு

பெரம்பலூரில் குழந்தைகள் மையத்தை மாவட்ட ஆட்சியர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-06-13 08:26 GMT

பெரம்பலூரில் முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள குழந்தைகள் மையத்தை மாவட்ட ஆட்சியர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறையின் சார்பில் இயங்கி வரும் குழந்தைகள் மையத்தில் உள்ள அடிப்படை வசதிகள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குழந்தைகளின் எடை சராசரி கால இடைவெளியில் பரிசோதிக்கப்படுகின்றதா, அரசின் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்தான உணவுப்பொருட்கள் இருப்பு போதுமானதாக உள்ளதா என மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். மேலும் அந்த குழந்தைகள் மையத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களின் விவரம் முறையாக பராமரிக்கப்படுகிறதா கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்துப் பொருட்கள் முறையாக வழங்கப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் போது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ, வட்டார அலுவலர் பிரேமா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News