100% வாக்குப்பதிவு வேண்டி விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கி வைப்பு !
மயிலாடுதுறை மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு வேண்டி விழிப்புணர் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்;
By : King 24x7 Angel
Update: 2024-03-12 12:23 GMT
பிரச்சார வாகனம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையிலான தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தில்,தனி வட்டாட்சியர் (தேர்தல்)விஜயராகவன், தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.