கட்டுமானம் குறித்த தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

நீலகிரியில் எல்லாவிதமான கட்டுமான பணிகள் குறித்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டார்.

Update: 2024-03-13 17:48 GMT

கட்டுமான பணி

ஊட்டி மரவியல் பூங்கா அருகே கட்டுமான பணியின் போது மண்சரிவு ஏற்பட்டு இன்று வட மாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். சம்பவ இடத்தை நேரில் அய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அருணா நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரியில் கட்டுமான பணிகள் நடைபெற்றால் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தற்போது மண் சரிவு ஏற்பட்ட இந்த இடத்திற்கு பொக்லைன் எந்திரம் இயக்க அனுமதி கேட்டனர். ஆனால் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதி என்பதால் அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் பணியாளர்களைக் கொண்டு வேலை நடந்துள்ளது. பணியாளர்களைக் கொண்டு வேலை செய்ய அனுமதி வாங்க வேண்டிய கட்டாயம் கிடையாது. இதனால் பணியாளர்கள் மூலம் வேலை நடந்து வந்துள்ளது‌. ஆனாலும் இதற்குப் பின்னர் மாவட்டத்தில் எந்தவிதமான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து கட்டட பொறியாளர்கள் மற்றும் கட்டுமான துறையில் உள்ளவர்களிடம் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். நீலகிரியில் கட்டுமான பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News